/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மக்களை பாதுகாக்க நடவடிக்கை: பொன்முடி
/
மக்களை பாதுகாக்க நடவடிக்கை: பொன்முடி
ADDED : டிச 01, 2024 04:30 AM
விழுப்புரம் : மரக்காணம் பகுதியில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, வனத்துறை அமைச்சர் பொன்முடி, நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
மரக்காணம் அடுத்த கூனிமேடு குப்பம், புயல் பாதுகாப்பு மையத்தை ஆய்வு செய்த பின், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக கடலோர பகுதிகளில் கனமழை, புயல் பாதிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பின்றி போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில், கனமழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் உணவுப்பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனமழையின்போது, சாலையோரங்களில் மரங்கள் விழுந்தால் உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மின் பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளில், உடனடியாக சரி செய்வதற்கு, மின்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும், ஏரிகள், ஆறுகள் ஆகியவற்றில் நீர் இருப்பு குறித்த தகவல், நீர் வெளியேறும் அளவினை தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.