/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம்
/
அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம்
ADDED : செப் 05, 2025 10:49 PM

விழுப்புரம்; விழுப்புரம் அருகே வளவனுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
பொதுப்பணி துறை சார்பில், 1 கோடியே 23 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள், கழிப்பறை, சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற உள்ளது.
இந்த கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு, லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டனார்.
நிகழ்ச்சியில், வளவனுார் பேரூராட்சி சேர்மன் மீனாட்சி ஜீவா, தி.மு.க., நகர செயலாளர் ஜீவா, செயல் அலுவலர் அண்ணாதுரை, பள்ளி தலைமை ஆசிரியர் கமலேஷ்வரி, துணை தலைவர் அசோக்.
முன்னாள் சேர்மன் சம்பத், வழக்கறிஞர் சுரேஷ், பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் பாலாஜி, கவுன்சிலர்கள் சசிகலா, மகாலட்சுமி, சந்திரா, வடிவேல், யுவராஜா, ஆரிஸ், பாஸ்கரன், சிவசங்கரி, கந்தன், பார்த்திபன், கீதா, உமா மகேஸ்வரி, பத்மாவதி உட்பட பலர் பங்கேற்றனர்.