/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஊராட்சி தலைவர்களுடன் கூடுதல் கலெக்டர் ஆலோசனை
/
ஊராட்சி தலைவர்களுடன் கூடுதல் கலெக்டர் ஆலோசனை
ADDED : மார் 17, 2024 12:10 AM

செஞ்சி: செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்களுடன் கூடுதல் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள், கவுன்சிலர்களுடன் கோடையின் போது குடிநீர் பிரச்னை வராமல் தடுக்கவும், கூடுதல் குடிநீர் கிடைக்கச் செய்வது குறித்தும் ஒன்றிய அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., சீத்தாலட்சுமி வரவேற்றார்.
அப்போது பேசிய கூடுதல் கலெக்டர், வறட்சியின் போது அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர் வினியோகத்தை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
தேவையான முன்னேற்பாடுகளை இப்போதே செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் செயற்பொறியாளர் ராஜா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் விக்னேஷ், உதவி செயற்பொறியாளர் யாசின், உதவி பொறியாளர்கள் அருண்பிரசாத், சதீஷ், சுப்ரமணியன், தண்டபாணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமாறன், சசிகலா, பழனி, காஞ்சனா, அபிராமி மற்றும் கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

