/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலத்தில் கூடுதல் கலெக்டர் ஆய்வு
/
மயிலத்தில் கூடுதல் கலெக்டர் ஆய்வு
ADDED : ஆக 29, 2025 12:12 AM

மயிலம்: மயிலத்தில் விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் பத்மஜா நேரில் ஆய்வு செய்தார்.
மயிலம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட மூலம் பிளாஸ்டிக் அரைக்கும் தொழிற்கூடம் உள்ளது.
இந்த தொழிற்கூடத்தில் உள்ள இயந்திரங்களை விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் பத்மஜா நேரில் ஆய்வு செய்தார்.
இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற பிளாஸ்டிக் பொருட்களை விரைவில் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி நிர்வாகம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
அப்பொழுது மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், மணிமாறன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர், துணை பி.டி.ஓ., சேட்டு, ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார், ஒன்றிய பொறியாளர் ராதா, மயிலம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், ஊராட்சி செயலாளர் சங்கர் உட்பட பலர் ஆய்வின்போது உடன் இருந்தனர்.

