நகராட்சி பொறியாளருக்கு கூடுதல் பொறுப்பால் பணிகள் பாதிப்பு
நகராட்சி பொறியாளருக்கு கூடுதல் பொறுப்பால் பணிகள் பாதிப்பு
ADDED : மார் 23, 2026 10:38 PM
திண்டிவனம்: விழுப்புரம் நகராட்சி பொறியாளர் கூடுதலாக 2 நகராட்சியை கவனிப்பதால் பணிச்சுமை ஏற்பட்டு, பணிகள் பாதிக்கப்படுகிறது.
திண்டிவனம் நகராட்சியில் பொறியாளராக பணிபுரிந்தவர் சரோஜா. இவர் கடந்த ஆண்டு நவம்பரில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் விழுப்புரம் நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி, திண்டிவனம் நகராட்சி பொறியாளராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.
ஒரே சமயத்தில் இரண்டு நகராட்சி பணியை மேற்கொள்வதால், நகராட்சியின் அத்திவசிய பணிகள் பாதிக்கப்பட்டு, கோப்புகள் தேங்கும் நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே தற்போது, கடலுார் மாநகராட்சியின் பொறியாளராகவும் கூடுதல் பொறுப்பு புவனேஸ்வரிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரே சமயத்தில் இரண்டு நகராட்சிகள் மற்றும் ஒரு மாநகராட்சியை கவனிப்பதால், கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு நகராட்சிகளில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்னையில் சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் வேலுார் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் தலையிட்டு, காலியாக உள்ள இடங்களில் தனியாக பொறியாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
