/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆதித்யாஸ் விவேகானந்தா மழலையர் பள்ளி திறப்பு
/
ஆதித்யாஸ் விவேகானந்தா மழலையர் பள்ளி திறப்பு
ADDED : ஜூன் 17, 2025 12:42 AM

விழுப்புரம் : விழுப்புரம் ஆதித்யாஸ் விவேகானந்தா பள்ளியில், மழலையர் மாணவர்களுக்கான பள்ளி திறப்பு விழா நடந்தது.
விழுப்புரம் தேவநாதசுவாமி நகரில் ஆதித்யாஸ் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மழலையர்களுக்கான வகுப்புகள் எல்.கே.ஜி., யு.கே.ஜி., துவக்க விழா நேற்று நடந்தது.
பள்ளி முதல்வர் கிருஷ்ணராஜ், துணை முதல்வர் அல்த்தியா உட்பட ஆசிரியர்கள், மழலையர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பூங்கொத்து மற்றும் இனிப்பு வழங்கி வரவேற்றனர். துவக்க நாளில், வகுப்பறை செயல்பாடுகளுடன் கற்றலை மகிழ்வோடு துவங்கிய மழலைகள் விளையாட்டு பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர்.
ஒவ்வொரு மழலையர்களுக்கும், ஆதித்யாஸ் விவேகானந்தா குடும்பம் சார்பில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.