/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானுார் அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
/
வானுார் அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
வானுார் அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
வானுார் அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
ADDED : ஜூன் 04, 2025 12:28 AM

வானுார் : வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கியது.
வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று முன்தினம் சிறப்பு பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்தது. 2ம் நாளான நேற்று சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடந்தது.
சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு கல்லுாரி முதல்வர் வில்லியம் சேர்க்கைக்கான படிவத்தை வழங்கினார். இதனை தொடர்ந்து 9ம் தேதி மற்றும் 12ம் தேதி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவர்கள் காலை 10;00 மணிக்கு கல்லுாரிக்கு வரவேண்டும். தங்களின் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கான மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ் அசல், சாதிச்சான்று, ஆதார் அட்டை, வங்கி புத்தகம், பாஸ் போர்ட் அளவு போட்டோ 5 கொண்டு வர வேண்டும் என கல்லுாரி முதல்வர் தெரிவித்துள்ளார்.