/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., வழக்கறிஞர் மாவட்ட செயலாளரிடம் ஆசி
/
அ.தி.மு.க., வழக்கறிஞர் மாவட்ட செயலாளரிடம் ஆசி
ADDED : ஜன 06, 2024 06:18 AM

விழுப்புரம், : விழுப்புரம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராதிகா, முன்னாள் அமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்.
விழுப்புரம் நகராட்சி 9 வது வார்டு கவுன்சிலர் வழக்கறிஞர் ராதிகா. விழுப்புரம் மாவட்ட அரசு சிறப்பு வழக்கறிஞர் மற்றும் நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு இயக்குனராக பணியாற்றியவர்.
இவரை, மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் சண்முகம் பரிந்துரையின் பேரில், கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி, விழுப்புரம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வழக் கறிஞர் பிரிவு செயலாளராக நியமித்துள்ளார்.
இதனையடுத்து, மாவட்ட செயலாளர் சண்முகத்தை சந்தித்து, வழக்கறிஞர் ராதிகா ஆசி பெற்றார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செங்குட்டுவன், நகர அ.தி.மு.க., துணை செயலாளர் வழக்கறிஞர் செந்தில் உடனிருந்தனர்.