/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., நகர செயலாளர் அடித்து கொலை செஞ்சியில் பயங்கரம்
/
அ.தி.மு.க., நகர செயலாளர் அடித்து கொலை செஞ்சியில் பயங்கரம்
அ.தி.மு.க., நகர செயலாளர் அடித்து கொலை செஞ்சியில் பயங்கரம்
அ.தி.மு.க., நகர செயலாளர் அடித்து கொலை செஞ்சியில் பயங்கரம்
ADDED : மார் 18, 2024 05:21 AM

செஞ்சி : செஞ்சியில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் அ.தி.மு.க., நகர செயலாளரை அடித்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, பீரங்கிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 47; அ.தி.மு.க., நகர செயலாளர். செஞ்சி அடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 44; செஞ்சியில் திருவண்ணாமலை சாலையில் டீ கடை நடத்தி வருகிறார்.
இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் வெங்கடேசன், திருவண்ணாமலை சாலையில் உள்ள வங்கி ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க வந்தார்.
அப்போது, அங்கிருந்த ராஜேந்திரன், அவரது மனைவி கல்பனா, 35; ஆகியோர் வெங்கடேசனிடம் பணம் கேட்டு தகராறு செய்தனர். அதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், அங்கு கிடந்த மரக்கட்டையாலும், கல்லாலும் வெங்கடேசனை தாக்கினார். இதில் வெங்கடேசன் மண்டை உடைந்தது ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
தகவலறிந்து வந்த செஞ்சி இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார், வெங்கடேசனை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் நேற்று மாலை 5:00 மணியளவில் உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து ராஜேந்திரனை கைது செய்தனர். கல்பனாவை தேடி வருகின்றனர். இறந்த வெங்கடேசனுக்கு நித்யா, 38; என்ற மனைவியும், கீர்த்தனா, 15; தனுஸ்ரீ, 10; ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

