ADDED : அக் 13, 2024 07:56 AM

விழுப்புரம், : விழுப்புரத்தில், நகர அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
வடக்கு நகர அவைத்தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் செந்தில் வரவேற்றார்.
செயலாளர் ராமதாஸ், பொருளாளர் கவுன்சிலர் கோல்டு சேகர், பிரதிநிதிகள் சிவன், பாக்கியலட்சுமி, மகளிரணி செயலாளர் பத்மபிரியா முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் சண்முகம் முன்னாள் மத்திய அமைச்சர் ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், அ.தி.மு.க., ஆண்டு விழாவையொட்டி, வரும் 17ம் தேதி வார்டுகள் தோறும் கட்சி கொடியேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், தகவல் தொழில் நுட்ப பிரிவு ஜெகதீஸ்வரி சத்யராஜ், பொதுக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் நகர செயலாளர் ஜானகிராமன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர் பாண்டியன், ஜெ., பேரவை பொருளாளர் ரகுநாதன், தலைவர் குமரன், கவுன்சிலர் கவுன்சிலர் ராதிகா, வார்டு செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.