ADDED : அக் 14, 2024 08:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம், : ஒலக்கூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிமேடுபேட்டையில் நடந்தது.
கூட்டத்திற்கு, ஒன்றிய அவைத்தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். ஒலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் சண்முகம் சிறப்புரையாற்றினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ராமச்சந்திரன், திண்டிவனம் எம்.எல்.ஏ., அர்ஜூனன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் ஒலக்கூர் மேற்கு ஒன்றிய அனைத்து அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.