/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நகராட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர் மனு
/
நகராட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர் மனு
ADDED : செப் 27, 2024 05:56 AM

விழுப்புரம்: விழுப்புரம் வடக்கு தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீரை அகற்றுமாறு, நகர் மன்ற அ.தி.மு.க., கவுன்சிலர் ராதிகா நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தார்.
மனுவில், விழுப்புரம் நகராட்சி 9வது வார்டுக்கு உட்பட்ட வடக்கு தெருவில் உள்ள பாதாள சாக்கடை சேகரிப்பு தொட்டியில், கடந்த 6 மாதமாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனை அகற்றும் பணி முழுமையாக செயல்படவில்லை.
மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்படும் கழிவுநீர் மீண்டும் தொட்டியில் சேகரம் ஆகிறது. மின் மோட்டார் பழுதான காரணத்தினால், கழிவுநீர் தேங்கி, அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இதேநிலை தொடர்வதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்னை குறித்து பலமுறை பொதுமக்கள் சார்பில் நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
உடனடியாக கழிவுநீர் தேங்காமல் அகற்ற நிரந்தர தீர்வு காண வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.