/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கடிதம் கேட்டு போலீசிடம் மல்லு கட்டிய அ.தி.மு.க.,வினர்
/
ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கடிதம் கேட்டு போலீசிடம் மல்லு கட்டிய அ.தி.மு.க.,வினர்
ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கடிதம் கேட்டு போலீசிடம் மல்லு கட்டிய அ.தி.மு.க.,வினர்
ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கடிதம் கேட்டு போலீசிடம் மல்லு கட்டிய அ.தி.மு.க.,வினர்
ADDED : பிப் 19, 2024 11:28 PM
திண்டிவனம் நகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பிப்ரவரி 16ம் தேதி முன்னாள் அமைச்சர் சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
ஆர்பாட்டத்திற்கு முன்கூட்டியே திண்டிவனம் டவுன் போலீசாரிடம் அ.தி.மு.க., நிர்வாகிகள் அனுமதி தரக்கோரி கடிதம் வழங்கினர். முதல் நாள் வரை போலீசார் அனுமதி கடிதம் தராமல் இழுத்தடித்து வந்தனர்.
போலீசாரிடம் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கடிதம் வாங்கிய பிறகு ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என மாஜி அமைச்சர் சண்முகம் விடாப்பிடியாக இருந்தார். திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ., அர்ஜூனன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம் அனுமதி கடிதம் வாங்கி வருமாறு கூறினார்.
கட்சி நிர்வாகிகள் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அனுமதி கடிதம் கேட்ட போது, தாலுாகா அலுவலகம் எதிரில் நடத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், அனுமதி தரமுடியாது என்று தெரிவித்தனர்.
இதற்கு அ.தி.மு.க.,வினர் அனுமதி மறுக்கும் கடிதத்தையாவது கொடுக்கும்படி கேட்டும் போலீசார் தரவில்லை.
கடைசியில் போலீசார், காந்தியார் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்துவற்கு நீண்ட நேர இழுபறிக்கு பிறகு அனுமதி கடித்தை அ.தி.மு.க.,வினர் வழங்கினர்.
எந்த இடமாக இருந்தாலும் போலீசாரிடம் அனுமதி கடிதம் வந்தால்தால்தான் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மாஜி அமைச்சர் திட்டவட்டமாக கூறியதால், கடைசி வரை போராடி அனுமதி கடிதம் வாங்கி, மாஜி அமைச்சரிடம் காண்பித்து நிர்வாகிகள் நல்ல பெயர் வாங்கினர்.
அனுமதி கடிதம் வாங்குவதில் ஏன் இவ்வளவு தாமதம் என கேட்டதற்கு அ.தி.மு.க.,வினர் தரப்பில், 'ஏற்கனவே முதல்வரைப் பற்றி அவதுாறாக பேசியதாக சண்முகம் மீது நான்கு வழக்கு கோர்ட்டில் உள்ளது.
தற்போது ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி இல்லாமல் நடத்தினால், மீண்டும் ஏதாவது ஒரு ரூபத்தில் அவர் மீது போலீசார் வழக்கு போட்டு கோர்ட்டிற்கு இழுப்பார்கள். அதனால்தான் முறைப்படி போலீசாரிடம் அனுமதி கடிதம் வாங்கி ஆர்ப்பாட்டத்தில் மாஜி அமைச்சர் சண்முகம் கலந்து கொண்டார்' என்ற தகவலை தெரிவித்தனர்.

