ADDED : பிப் 26, 2024 11:11 PM

திண்டிவனம் : திண்டிவனம் அருகே மன்னார்சாமி கோவிலில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது.
ஜெ., பிறந்த நாளை முன்னிட்டு, நடந்த கூட்டத்திற்கு, அர்ஜூனன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் நடராஜன், ரவிவர்மன், பன்னீர், நகர செயலாளர் தீனதயாளன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சண்முகம் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், பேச்சாளர்கள் சீனு, சுப்மணியன், மாநில எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் ஏழுமலை, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், மாவட்ட பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், திண்டிவனம் நகர ஜெ.,பேரவைச் செயலாளர் ரூபன்ராஜ்.
மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி, மருத்துவர் அணி துணைச் செயலாளர் கோகுல் கிருஷ்ணராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் மணிமாறன், மாணவரணி குமரவேல், ஜெ., பேரவை சக்தி பெரியதம்பி, மாவட்ட பிரதிநிதி முருகன், ஐ.டி., பிரிவு செயலாளர் கோகுல்ராஜ், சவுகத் அலி உட்பட பலர் பங்கேற்றனர்.
