ADDED : பிப் 26, 2024 11:16 PM

விழுப்புரம் : விழுப்புரத்தில், அ.தி.மு.க., மாணவரணி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழா நடந்தது.
மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், மாவட்ட மகளிரணி செயலாளர் தமிழ்ச்செல்வி, வடக்கு நகர செயலாளர் பத்மபிரியா, நகர இளைஞரணி செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் சண்முகம் பொதுமக்களுக்கு மிக்சி, கிரைண்டர், குக்கர், தையல் மெஷின், வேட்டி, சேலைகள் உள்ளிட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் அற்புதவேல், மாவட்ட பாசறை இணைச் செயலாளர் வினித், இளைஞரணி இணைச் செயலாளர் குமரன், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், கண்ணன், ராஜா, முருகன், கவுன்சிலர்கள் சேகர், வழக்கறிஞர் ராதிகா, நகர பேரவைச் செயலாளர் வரதன், அண்ணா தொழிற் சங்க செயலாளர் தீனதயாளன், மாணவரணி செயலாளர் குகன், மாவட்ட அண்ணா தொழிற் சங்க நிர்வாகிகள் வேங்கடபதி, கோவிந்தராஜ், மாணவரணி சுரேஷ், வர்த்தக அணி வீராசாமி, வழக்கறிஞர் தங்கம் சந்தோஷ், பொறியாளர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
