/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்
/
அ.தி.மு.க., இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஜன 09, 2024 01:15 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் அ.தி.மு.க., மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் பிரித்விராஜ் தலைமை தாங்கினார். தலைவர் குமரன், பொருளாளர் சகாதேவன் முன்னிலை வகித்தனர்.
துணைச் செயலாளர்கள் பாலசுப்ரமணியன், முருகன், இளைஞரணி ஒன்றிய செயலாளர்கள் மயிலம் மனோகரன், மகேஷ், மரக்காணம் ராஜா, அய்யனார், காணை சிவக்குமார், பற்குணன், விக்கிரவாண்டி அன்பரசன், சக்தி, கண்டமங்கலம் சங்கர், ஏழுமலை, கோலியனுார் திருமலை, ரமேஷ், மலையனுார் செல்வம், செஞ்சி ஜெயப்பிரகாஷ், ரமேஷ் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெற பாடுபட வேண்டும்.
தொடர்ந்து வரும் சட்டசபை தேர்தலிலும் மீண்டும் முதல்வராக பழனிசாமி வருவதற்கு, தீவிர கள பணியாற்ற வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.