/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., இளைஞர் பாசறை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
அ.தி.மு.க., இளைஞர் பாசறை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
அ.தி.மு.க., இளைஞர் பாசறை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
அ.தி.மு.க., இளைஞர் பாசறை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜன 09, 2024 01:20 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். தலைவர் அன்பு, துணைச் செயலாளர் வினோத், பொருளாளர் குருமூர்த்தி, நகர செயலாளர்கள் ஹரிகிருஷ்ணன், நீலமேகம், கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட இணைச் செயலாளர்கள் லட்சியவேந்தன், சூரியபிரகாஷ், ஈஸ்வர், கவின், மகேஷ், தங்கப்பாண்டியன், பேரூராட்சி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறைக்கான சமூக வலைதள குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அதற்கான லோகோ வெளியிடப்பட்டது. வரும் லோக்சபா தேர்தல் மற்றும் 2026 சட்டசபை தேர்தல் பணிக்கான வேலையை மேற்கொள்ள வேண்டும்.
அதற்காக ஐ.டி. விங் செய்வதை போல் பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட குழுக்களை ஒன்றிய அளவில் ஏற்படுத்தி, அதன் மூலம் கட்சி வளர்ச்சிப் பணி மற்றும் தேர்தல் பணியை ஒருங்கிணைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.