/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கரும்பில் சிலந்திப்பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த ஆலோசனை
/
கரும்பில் சிலந்திப்பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த ஆலோசனை
கரும்பில் சிலந்திப்பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த ஆலோசனை
கரும்பில் சிலந்திப்பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த ஆலோசனை
ADDED : ஜூலை 15, 2025 09:07 PM
செஞ்சி; கரும்பு பயிரில் சிலந்திப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு செம்மேடு ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
சர்க்கரை ஆலை விடுத்த செய்திக்குறிப்பு:
செம்மேடு, சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட கிராம கரும்பு வயல்களில் சிலந்தி பூச்சி தாக்குதல் அதிகமாக தென்படுகிறது. பூச்சியின் தாக்குதல், தற்போதைய வெப்பமிகு சூழலால் அதிகமாக தோன்றி பின் பரவி வருகிறது.
இவ்வகை சிலந்திபூச்சிகள் இலையின் அடிப்பகுதியில் கூட்டமாக வலை போன்று அமைப்பை உருவாக்கி விடுகிறது.
இவை இலைகளில், பச்சியத்தை உறிஞ்சி சாப்பிடுவதால் சிகப்பு அல்லது வெள்ளை நிற புள்ளிகள் தோன்றுகின்றன.
இந்த புள்ளிகள் பெரிதாகி இலைகள் மஞ்சளாக மாறி, காய்ந்து அழிந்து விடுகிறது. இந்த பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்த பூச்சி தாக்கிய இலைகளை பறித்து அப்புறப்படுத்த வேண்டும்.
ஆரம்ப நிலையில் வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்தினை, ஒரு லிட்டருக்கு மூன்று முதல் ஐந்து மில்லி என்ற விதத்திலும், பூச்சி தாக்குதல் அதிகமாக இருந்தால், ப்ரோபார்ட்கைட் 57 சதவீதம் இ.சி., என்ற மருத்தை 1 லிட்டருக்கு 2 மில்லி என்ற விகிதத்திலும் ஒட்டும் திரவத்துடன் கலந்து இலையின் அடிப்பகுதி நனையுமாறு தெளிக்க வேண்டும்.
இம்முறையை பின்பற்றி சிலந்தி பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.