/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கரும்பு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆலோசனை
/
கரும்பு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆலோசனை
கரும்பு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆலோசனை
கரும்பு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆலோசனை
ADDED : மே 31, 2025 11:58 PM
கண்டாச்சிபுரம்: முண்டியம்பாக்கம் ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை சார்பில் விவசாயிகளுக்கு கரும்பு உற்பத்தி அதிகரிப்புக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கெடாரில் நடந்த கூட்டத்திற்கு, முண்டியம்பாக்கம் ராஜஸ்ரீ சக்கரை ஆலையின் ஆராய்ச்சித்துறைத் தலைவர் ஜெயராம் முன்னிலை வகித்தார்.
ஆராய்ச்சித்துறை முதுநிலை அதிகாரி ராஜப்பா தலைமை தாங்கி பேசுகையில், 'கரும்பு விவசாயிகள் நடவு செய்யும் கரும்பின் பரப்பிற்கேற்ப அவரவரது வயலிலேயே சொந்தமாக நாற்றங்கால் கரும்பை 6 மாதத்திற்கு முன்பே நடவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய 7 முதல் 10 சென்ட் நாற்றங்கால் நடவே போதுமானது' என்றார்.
கூட்டத்தில், விதைக்கரும்பு தாயாரித்தல், மகசூல் அதிகரித்தல் உள்ளிட்ட ஆலாசனை வழங்கப்பட்டது.