
வானுார், : திண்டிவனம் அடுத்த வெள்ளக்குளம் கிராம சமுதாய முன்னேற்ற சங்கம் சார்பில், ஜனநாயகத்திற்கான முறைசாரா பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க செயற்குழு உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கரசானுாரில் நடந்தது.
சங்க செயலாளர் கவுசல்யா மார்டின் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஏசுராஜூ வரவேற்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பள்ளிக் கல்வி பாதுகாப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் ஏகாம்பரம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
கூட்டத்தில், தையல் பயிற்சி முடித்த மகளிர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மயிலம் சுகாதார ஆய்வாளர்கள் குணசேகரன், வசந்தகுமார், ஓய்வு பெற்ற திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் லோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
திட்ட மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
விழாவையொட்டி, ஆவுடையார்பட்டு, வன்னிப்பேர், சிறுவாடி, புதுக்குப்பம், மயிலம் பகுதி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.