/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கல்லுாரி மாணவர்களுக்கு வேளாண் பரிசோதனை பயிற்சி
/
அரசு கல்லுாரி மாணவர்களுக்கு வேளாண் பரிசோதனை பயிற்சி
அரசு கல்லுாரி மாணவர்களுக்கு வேளாண் பரிசோதனை பயிற்சி
அரசு கல்லுாரி மாணவர்களுக்கு வேளாண் பரிசோதனை பயிற்சி
ADDED : ஜன 22, 2024 12:17 AM
விழுப்புரம் -விழுப்புரத்தில் அரசு கல்லுாரி மாணவர்களுக்கு, வேளாண் அலுவலகத்தில் மண், உர பரிசோதனை பயிற்சி அளிக்கப்பட்டது.
விழுப்புரத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வேதியியல் இளங்கலை இறுதியாண்டு மாணவர்கள், விழுப்புரம் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள மண் பரிசோதனை நிலையம், நடமாடும் மண் பரிசோதனை நிலையம், உர பரிசோதனை நிலையங்களில் பயிற்சி பெற்றனர்.
பயிற்சி இறுதியில், வேளாண்மை இணை இயக்குனர் கணேசன், துணை இயக்குனர் பெரியசாமி ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.
பயிற்சியில், மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை செய்ய வேண்டியதன் அவசியம், பரிசோதனை முறைகள், வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.
ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர்கள் கிருத்திகா, முருகன், பிரியங்கா ஆகியோர் செய்தனர்.