/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேளாண் இடுபொருள் புத்துாட்ட பயிற்சி
/
வேளாண் இடுபொருள் புத்துாட்ட பயிற்சி
ADDED : செப் 19, 2024 11:14 PM
திண்டிவனம்: திண்டிவனம் கோட்டத்தைச் சேர்ந்த வேளாண் இடுபொருள் விற்பனையாளர்களுக்கான புத்துாட்ட பயிற்சி நடந்தது.
திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, விழுப்புரம்விதை ஆய்வு துணை இயக்குனர் சரவணன் தலைமை தாங்கி, விதைகள் சட்டம், முளைப் புத்திறன், பிறரக கலப்பு, ஈரப்பதம், பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள், உரிம கட்டணம் குறித்து விளக்க உரையாற்றினார்.
மரக்காணம் வேளாண் உதவி இயக்குனர் சரவணன், உரக்கட்டுப்பாட்டு சட்டம், மானிய விலையில் வழங்கப்படும் உரங்கள் குறித்தும், பூச்சி மருந்து சட்டங்கள் குறித்தும் பேசினார்.
பயிற்சியில், மரக்காணம், மயிலம், ஒலக் கூர், செஞ்சி, வல்லம், மேல்மலையனுார்மற்றும் வானுார் பகுதிகளைச் சேர்ந்த வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் 80க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.