ADDED : செப் 17, 2026 05:11 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் விதை ஈரப்பதத்தை அறிந்து சேமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலர் சோபனா செய்திக்குறிப்பு:
உற்பத்தி செய்த விதைக்கு விதை சான்று பெறுவதற்கும், விதையை சேமிக்க ஈரப்பதம் முக்கிய பங்கு வகிக்கிறது. நெல்லுக்கு, 13 சதவீதமும், சிறுதானியத்திற்கு, 12 சதவீதமும், பருப்பு வகை பயிர்கள் மற்றும் எண்ணெய்வித்து பயிர் விதைகளுக்கு 9 சதவீதம் ஈரப்பதம் இருக்கலாம். விதையின் முளைப்பு திறனை பாதுகாக்க விதையின் ஈரத்தன்மையை அறிந்து சேமித்து வைக்க வேண்டும்.
விதை குவியலில் இருந்து, 100 கிராம் விதை மாதிரியை எடுத்து ஈரப்பதத்தை அறிய பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும். விழுப்புரம் வேளாண் இணை இயக்குநர் அலுவலக முதல் தளத்தில் இயக்கி வரும் விதைப்பரிசோதனை நிலையத்தில் கொடுத்து பகுப்பாய்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். ஒரு விதை மாதிரி ஆய்வுக்கு 80 ரூபாய் கட்டணம் ஆகும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
