/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உழவரைத் தேடி வேளாண் திட்ட முகாம்
/
உழவரைத் தேடி வேளாண் திட்ட முகாம்
ADDED : ஆக 10, 2025 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : பெலாக்குப்பம் அடுத்த வேம்பூண்டி கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண் திட்ட முகாம் நடந்தது.
முகாமிற்கு ஊராட்சி தலைவர் பூங்கா பாக்யராஜ் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட வேளாண் துறை துணை இயக்குனர் குமாரி ஆனந்தி அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.
தோட்டக்கலை அலுவலர் விஜயராஜ், ஆத்மா திட்ட அலுவலர் உஷா, வட்டார வேளாண் வளர்ச்சி திட்ட அலுவலர் ரேகா, கரும்பு பயிர் வளர்ச்சி அலுவலர் சந்தானம், கால்நடை பராமரிப்பு மருத்துவர் சரவணன் பேசினர். கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

