sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நேரடி நெல் விதைப்பு வயலில் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

/

நேரடி நெல் விதைப்பு வயலில் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

நேரடி நெல் விதைப்பு வயலில் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

நேரடி நெல் விதைப்பு வயலில் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு


ADDED : நவ 09, 2025 06:23 AM

Google News

ADDED : நவ 09, 2025 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: தைலாபுரம் கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு வயலை, திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

வானுார் தாலுகாவில் சம்பா பருவத்தில் இதுவரை 722 எக்டர் பரப்பளவில் தைலாபுரம், கொஞ்சிமங்கலம், எடச்சேரி, அறுவடை, காரட்டை, உப்புவேலுார், புது குப்பம் கிராமங்களில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு முறையில் சாகுபடி செய்துள்ளனர்.

திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் திருவரசன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் விஜய் கீதா, ஜமுனா, சிபி செபஸ்டியன் ஆகியோர் தைலாபுரம் கிராமத்தில் உள்ள நெற்பயிர் வயல்களை ஆய்வு செய்தனர். வானுார் வேளாண்மை உதவி இயக்குநர் எத்திராஜ் உடனிருந்தார்.

ஆய்வின் போது, தற்சமயம் நெற்பயிர்கள் துார் கட்டும் பருவத்தில் காணப்படுகிறது. வரும் வாரங்களில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்ப்பதால் விவசாயிகள் மேல் உரமாக யூரியா மற்றும் பொட்டாஷ் உரத்துடன் ஏக்கருக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட் மற்றும் 5 நெல் நுண்ணுாட்ட உரம் இட பரிந்துரைக்கபட்டது.

மேலும், உயிர் உரமான துத்தநாக சத்தை கரைத்துக் கொடுக்கக்கூடிய பாக்டீரியம் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு உள்ளது. இதனையும் தொழு உரத்துடன் கலந்து வயலில் தனியாக இடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ஆய்வின்போது உதவி வேளாண்மை அலுவலர் விஜயலட்சுமி மற்றும் விவசாயிகள் தங்கமணி, மலர்மன்னன் உடனிருந் தனர்.






      Dinamalar
      Follow us