/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேளாண் கணக்கெடுப்பு திட்டம் ஆர்.ஐ., - வி.ஏ.ஓ.,களுக்கு பயிற்சி
/
வேளாண் கணக்கெடுப்பு திட்டம் ஆர்.ஐ., - வி.ஏ.ஓ.,களுக்கு பயிற்சி
வேளாண் கணக்கெடுப்பு திட்டம் ஆர்.ஐ., - வி.ஏ.ஓ.,களுக்கு பயிற்சி
வேளாண் கணக்கெடுப்பு திட்டம் ஆர்.ஐ., - வி.ஏ.ஓ.,களுக்கு பயிற்சி
ADDED : நவ 11, 2024 05:34 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வேளாண்மை கணக்கெடுப்பு பயிற்சி முகாம் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசுகையில், 'மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, 2021-22 ம் நிதி ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு, மாவட்டத்தில், வேளாண் கணக்கெடுப்பு 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.
தற்போது, விழுப்புரம் மாவட்ட அளவிலான 11வது வேளாண் கணக்கெடுப்பு ( நிலை-2) பணிக்கான கணினி வழி பயிற்சி முகாம் நடக்கிறது. இதில், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அலுவலர்கள் மூலம், களப் பணியாளர்களான வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் மேற்பார்வையாளர்களான வருவாய் ஆய்வாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை கருதி, திட்டமிட்டபடி பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
முகாமில், மாவட்ட புள்ளியியல் துறை துணை இயக்குனர் முத்துக்குமரன், கோட்ட உதவி இயக்குனர்கள் அழகப்பன், செல்வராஜ் மற்றும் வட்டார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.