ADDED : அக் 11, 2024 11:19 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம் : விழுப்புரத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் நகராட்சி திடலில், சென்னை சாம்சங் நிறுவன தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க மாவட்ட தலைவர்கள் தாண்டவராயன், அர்ஜூனன் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர்கள் முருகன், சுந்தரமூர்த்தி, பொருளாளர்கள் சிவராமன், மணிகண்டன், சேகர், பழனி உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், சாம்சங் நிறுவனத்தில், தொடர்ந்து 30 நாட்களாக சங்கம் அமைக்க அனுமதி கேட்டு போராட்டம் நடத்தி வரும் அந்நிறுவன தொழிலாளர்களை கைது செய்ததை கண்டித்து பேசினர்.
