/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாய தொழிலாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
/
விவசாய தொழிலாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 10, 2025 10:15 PM

விழுப்புரம்; விழுப்புரத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், விலைவாசி உயர்வை குறைக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் நாராயணன் தலைமை தாங்கினார்.
இந்திய கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் சவுரிராஜன், மாவட்ட தலைவர் தனஞ்செழியன், பொருளாளர் கலீல்கான் கண்டன உரையாற்றினர்.
தமிழகத்தில் தினசரி உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிக்கு ஆண்டுக்கு ரூ.4.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், வேலை அட்டை பெற்ற அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், விவசாய தொழிலாளர் நல வாரியத்தை மீண்டும் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
நிர்வாகிகள் ராமச்சந்திரன், ஆறுமுகம், ஜூலி, சக்திவேல், ஜீவா, ஜெயராமன், அய்யனாரப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட துணை தலைவர் பிச்சை நன்றி கூறினார்.