/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டியில் உழவர் சந்தை வேளாண்துறை அமைச்சர் ஆய்வு
/
விக்கிரவாண்டியில் உழவர் சந்தை வேளாண்துறை அமைச்சர் ஆய்வு
விக்கிரவாண்டியில் உழவர் சந்தை வேளாண்துறை அமைச்சர் ஆய்வு
விக்கிரவாண்டியில் உழவர் சந்தை வேளாண்துறை அமைச்சர் ஆய்வு
ADDED : ஆக 04, 2025 11:10 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பஸ் நிலையம் பின்புறம் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய உழவர் சந்தை கட்டப்பட்டுள்ளது. 95 சதவீத பணிகள் முடிந்த நிலையில் நேற்று வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ' விவசாயிகள் நலன் கருதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா சட்டசபையில் கோரிக்கை வைத்ததின் பேரில் உழவர் சந்தை கட்டும் பணி துவங்கி முடிந்துள்ளது. விரைவில் திறக்கப்படும்' என்றார்.
ஆய்வின்போது, அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மா வட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி, முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், ஒன்றிய சேர்மன்கள் சங்கீத அரசி, வாசன்.
தாசில்தார் செல்வமூர்த்தி, பேரூராட்சி செயல் அலுவலர் ஷேக் லத்தீப், வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன், துணை இயக்குநர்கள் அன்பழகன், சுமதி, விற்பனகுழு செயலாளர் சந்துரு, உதவி இயக்குநர் கங்கா கவுரி .
ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ரவிதுரை, ஜெயபால், முருகன், நகர செயலாளர் நைனா முகமது, மாவட்ட தலைவர்கள் பாபு ஜீவானந்தம், முரளி, சீனுவாசன், பேரூராட்சி கவுன்சிலர் வீரவேல்.
இளைஞரணி அமைப்பா ளர் பாலகிருஷ்ணன், துணை அமைப்பாளர் சிவா, தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுந்தர், பிரதிநிதி அசோக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம் , அருணாசலம் பங்கேற்றனர்.