/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மழையால் பாதித்த பயிர்கள் வேளாண்மை அதிகாரி ஆய்வு
/
மழையால் பாதித்த பயிர்கள் வேளாண்மை அதிகாரி ஆய்வு
ADDED : டிச 23, 2024 06:49 AM

மரக்காணம்: மரக்காணம் பகுதியில் மழையால் பாதித்த நெற்பயிர்களை வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
மரக்காணம் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண்மை இணை இயக்குனர் ஈஸ்வர் ஆய்வு மேற்கொண்டார்.
பின் விதைகள், உயிர் உரங்கள், நுண்ணுரங்கள், ஜிப்சம், சிங் சல்பேட், வேளாண் உபகரணக் கிட்டுகள் ஆகியவற்றை விவசாயிகளுக்கு மானிய விலையில் விரைந்து வழங்கிட வேண்டும்.
விதைகளின் தரத்தினை உறுதிசெய்த பின்னரே விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்டு 33 சதவிதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் பெற்று தர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் கூறினார்.
கர்ணாவூர் கிராமத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் பயிர், எண்ணெய் வித்துக்கள் அபிவிருத்தி இயக்கத்தின் கீழ் பயிரிடப்பட்டுள்ள சோயா மொச்சை செயல் விளக்க பாத்திகள், ஜக்காம்பேட்டை கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை ஆய்வு மேற்கொண்டார்.
மானுார் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு கம்பு மற்றும் மக்காச்சோள பயிர்களுக்கு இடு பொருட்களை மான்யத்தில் விவசாயிகளுக்கு வேளாண்மை இணை இயக்குனர் வழங்கினார்.
மரக்காணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன், வேளாண்மை அலுவலர் தேவி, துணை வேளாண்மை அலுவலர் சண்முகவேலு உள்பட பலர் உடனிருந்தனர்.