/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எள் வயலில் வேளாண் அதிகாரி ஆய்வு
/
எள் வயலில் வேளாண் அதிகாரி ஆய்வு
ADDED : ஏப் 25, 2025 05:01 AM

வானுார்: வானுார் தாலுகாவில் குறைந்த நீர் தேவை உள்ள பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு வேளாண்மை அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார்.
உப்புவேலுார் குறுவட்டத்தில் புதுக்குப்பம் கிராமத்தில் விவசாயி ஏழுமலை, சாகுபடி செய்த எள் பயிரை வானுார் வேளாண் உதவி இயக்குநர் எத்திராஜ் ஆய்வு மேற்கொண்டு உரிய தொழில்நுட்ப அறிவுரை வழங்கினார்.
அப்போது அவர் விவசாயிகளிடம் கூறுகையில், 'கோடை பருவத்தில் ஆழ்துளை கிணறு மற்றும் திறந்தவெளி கிணறு உள்ள கிராமங்களில் குறைந்த நீர் தேவை கொண்ட பயிர்களான உளுந்து, எள் மற்றும் மணிலா பயிர்களை நடப்பு சித்திரைப் பட்டத்தில் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
உளுந்து ரகம் வம்பன் 8 மற்றும் வம்பன் 10, வேர்க்கடலை ரகம் வி.ஆர்.ஐ 10 போன்ற விதைகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் நிலத்தினை தரிசாக விடாமல் கோடை பயிர் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம்' என்றார்.
ஆய்வின் போது துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் தங்கம், பஞ்சநாதன் மற்றும் ஆத்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் கோவிந்தசாமி உடனிருந்தனர்.

