/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி கூட்டம்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி கூட்டம்
ADDED : ஏப் 15, 2025 08:52 PM

திண்டிவனம்; திண்டிவனம் கிடங்கல் 30வது வார்டு அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி புதிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் விஜயகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் சண்முகம், பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் தேர்தல் பணி குறித்து கூறி, நியமன உத்தரவு வழங்கினார்.
நிகழ்ச்சியில் அர்ஜூனன் எம்.எல்.ஏ., மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் பாலமுருகன், பொருளாளர் வெங்கடேசன், ஜெ., பேரவை இணைச் செயலாளர் குமார், மயிலம் மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன், பாசறை நிர்வாகிகள் ஜெயப்பிரகாஷ், கார்த்திக், நகர ஜெ.,பேரவை செயலாளர் ரூபன்ராஜ், மகளிர் அணி பொருளாளர் விஜயலட்சுமி, நகர இளைஞரணி செயலாளர் உதயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

