ADDED : செப் 18, 2025 11:14 PM

வானுார்: வானுார் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், தி.மு.க., அரசின் செயல்பாட்டை கண்டித்து, ராவுத்தன்குப்பம் ஊராட்சியில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் வரவேற்றார். சக்ரபாணி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தலைமை பேச்சாளர் ஆவடி குமார் கலந்து கொண்டு தி.மு.க., அரசின் செயல்பாட்டை கண்டித்து உரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் அணி செயலாளர்கள் குணசேகரன், வீரப்பன், ஆறுமுகம், பாலகிருஷ்ணன், ஜெகன், சுமன், ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ், வீரப்பன், மாவட்ட பாசறை துணை செயலாளர் வினோத்குமார், எழில்முருகன், சதீஷ்குமார், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் உமாபதி, மாவட்ட மாணவரணி துணை தலைவர் சசிக்குமார், கிளை செயலாளர்கள் பிரகாஷ், குமார், வைத்தி மற்றும் நிர்வாகிகள் மணிபாரதி, அன்பு, வெங்கடேசன், பிரகாஷ், ராமச்சந்திரன், சரவணன், ராஜேந்திரன், அன்பழகன், கவியரசு, அய்யப்பன், வரதராஜூ, ராமசாமி, குமார், மகாதேவன், கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.