/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 06, 2025 04:29 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் வருகை குறித்த நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில்,
சண்முகம் எம்.பி., கலந்து கொண்டு பேசினார்.
அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் பழனிச்சாமி வரும் 10ம் தேதி திண்டிவனம் அங்காளம்மன் கோவில் அருகே மாலை 6:00 மணிக்கு நடக்கும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார்.
இதையொட்டி திண்டிவனம், திருமண மண்டபத்தில் நேற்று காலை, அதே பகுதி மற்றும் ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க.,செயலாளர் சண்முகம் தலைமை தாங்கி பேசினார்.
அர்ஜூனன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். நகர செயலாளர் தீனதயாளன்,மாநில ஜெ.,பேரவை துணை செயலாளர் பாலசுந்தம், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை தலைவர் ஏழுமலை, ஜெ.,பேரவை செயலாளர்கள் ரூபன்ராஜ், விஜயகுமார், , வடபழனி, மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி, ஐ.டி.பிரிவு காமேஷ், பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், மாவட்ட மருத்துவர் அணி இணை செயலாளர் கோகுல்கிருஷ்ணராஜ், பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், திண்டிவனம் நகர இளைஞரணி செயலாளர் உதயகுமார், எம்.ஜி.ஆர்.மன்றம் ரவி, நகர மகளிர் அணி ஜெயஸ்ரீ, முன்னாள் நகர கூட்டுறவு வங்கி தலைவர் சக்கரவர்த்தி, கவுன்சிலர்கள் ஜனார்த்தனன், கார்த்திக், முன்னாள் கவுன்சிலர்கள் அய்யப்பன், சங்கர், பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.