/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 07, 2025 02:10 AM

திண்டிவனம்: திண்டிவனம் அருகே ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சண்முகம் பேசினார்.
அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் பழனிசாமி வரும் 11ம் தேதி மயிலம் தொகுதி நாட்டார் மங்கலத்தில் மாலை 4:00 மணிக்கு நடக்கும் 'மக்களை காப்போம் -தமிழகத்தை மீட்போம்' பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.
இது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திண்டிவனம் அருகே தீவனுாரில் நடந்தது. மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை தாங்கி பேசினார்.
மயிலம் ஒன்றிய செயலாளர்கள் விஜயன், சேகரன், ஒலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைப்பு செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன், ஒன்றிய நிர்வாகிகள் முத்துசாமி, நந்தகோபால், சீனுவாசன், அண்ணா தொழிற்சங்கம் பாஸ்கரன், வழக்கறிஞர் சம்பத், குமரன், ஒலக்கூர் ஒன்றிய நிர்வாகிகள் ரங்கநாதன், முருகானந்தம், ராஜசேகர், மக்பூல்பாஷா, ஜெகதீசன், பன்னீர், செந்தமிழ், ராஜதுரை, துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மயிலம் தொகுதி சார்பில், பொதுக்கூட்டத்தில் திரளாக கலந்து கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.