ADDED : பிப் 27, 2026 05:18 AM

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த சூரப்பட்டில், மாவட்ட அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட அவைத் தலைவர் தீனதயாளன் தலைமை தாங்கினார். காணை கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா வரவேற்றார். நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், ரூபன்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்பாபு, பன்னீர், ராமதாஸ், முருகன், பேரூராட்சி செயலாளர் பூர்ணாராவ், மகளிரணி மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி, முன்னிலை வகித்தனர்.
எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, அர்ஜூனன், செய்தி தொடர்பாளர் கோபிநாதன், தலைமைக் கழக பேச்சாளர்கள் செல்வராஜ், சீனிவாசன் வாழ்த்தி பேசினார்.
மாவட்ட செயலாளர் சண்முகம் சிறப்புரையாற்றி, தையல் இயந்திரம், விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
காணை கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா, முன்னாள் சேர்மன் இளங்கோ, ஒன்றிய அவைத் தலைவர் அன்பழகன், ஐ.டி., பிரிவு மாவட்ட தலைவர் கோகுல்ராஜ், வழக்கறிஞர் பிரிவு ஸ்ரீதர், மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, இணைச் செயலாளர் விஜலட்சுமி தணிகாசலம், கிளைச் செயலாளர்கள் தயாநிதி, வேலாயுதம், மணிகண்டன், தணிகாசலம், நடராஜ், கண்ணப்பன், ஊராட்சி தலைவர் பிரேமா குமரன் உட்பட பலர் பங்கேற்றனர். கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் பாண்டியன் நன்றி கூறினார்.

