/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாட்கள் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பிரசாரம்
/
விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாட்கள் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பிரசாரம்
விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாட்கள் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பிரசாரம்
விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாட்கள் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பிரசாரம்
ADDED : ஜூலை 08, 2025 11:40 PM

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் நாளை முதல் இரண்டு நாட்கள் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி சுற்றுப்பயணம் செய்கிறார்.
தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க., பொதுச்செயலாளரான எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை துவக்கியுள்ளார்.
சட்டசபை தொகுதி வாரியாக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற தலைப்பில் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் அவர், விழுப்புரம் மாவட்டத்தில் நாளை முதல் 2 தினங்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்.
ரோடு ஷோ
அவர் சேலத்தில் இருந்து நாளை பகல் 12:00 மணிக்கு விழுப்புரம் வருகிறார். அவருக்கு விழுப்புரம் பை-பாஸ் சாலையில் மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி., தலைமையில் நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.
பின்னர் மாலை 4:00 மணிக்கு, விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில் இருந்து பழனிசாமி, ரோடு ஷோவில் பங்கேற்கிறார்.
அவர் பழைய பஸ் நிலையம் வரை நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெறுகிறார். தொடர்ந்து மாலை 4:30 மணிக்கு, விழுப்புரம் நான்குமுனை சந்திப்பிற்கு சென்று, பொதுமக்களிடம் சிறப்புரையாற்றுகிறார்.
பின்னர், விக்கிரவாண்டி பஸ் நிலையம் அருகில் மாலை 6:00 மணிக்கு, பிரசாரம் செய்கிறார்.
தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு திண்டிவனம் செல்லும் அவருக்கு, ஆர்.எஸ்.பிள்ளை வீதி சந்திப்பில் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அங்கிருந்து காய்கறி மார்க்கெட் வரை ரோடு ஷோ நடத்தி, மக்களை சந்திக்கிறார். இரவு 7:30 மணிக்கு, திண்டிவனம்- செஞ்சி சாலையில் பிரசார பஸ்சில் நின்றபடி, மக்களிடம் உரையாற்றுகிறார்.
இந்த கூட்டங்களை முடித்துவிட்டு அன்று இரவு திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையில் உள்ள ஓட்டல் செரீனாவிற்கு சென்றடைகிறார்.
தொடர்ந்து நாளை மறுநாள் வானுார், மயிலம், செஞ்சி ஆகிய சட்டசபை தொகுதிகளில் பழனிசாமி, பிரசாரம் மேற்கொள்கிறார்.

