/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'எல்லா தொகுதியையும் தட்டி துாக்கணும்' நிர்வாகிகளை தெறிக்க விடும் அ.தி.மு.க., மா.செ.,
/
'எல்லா தொகுதியையும் தட்டி துாக்கணும்' நிர்வாகிகளை தெறிக்க விடும் அ.தி.மு.க., மா.செ.,
'எல்லா தொகுதியையும் தட்டி துாக்கணும்' நிர்வாகிகளை தெறிக்க விடும் அ.தி.மு.க., மா.செ.,
'எல்லா தொகுதியையும் தட்டி துாக்கணும்' நிர்வாகிகளை தெறிக்க விடும் அ.தி.மு.க., மா.செ.,
ADDED : ஜூலை 08, 2025 12:16 AM
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதியில் விழுப்புரம், திருக்கோவிலுார், விக்கிரவாண்டி, செஞ்சி தொகுதிகள் என 4 தொகுதிகள் தி.மு.க., வசமும், வானுார், திண்டிவனம் ஆகிய 2 தொகுதிகள் அ.தி.மு.க., வசமும், அ.தி.மு.க., கூட்டணியில் வெற்றி பெற்ற பா.ம.க.,விடம் ஒரு தொகுதியும் உள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலின்போது அ.தி.மு.க.,வினர் ஆளும் கட்சி என்ற அலட்சியத்துடனும், கட்சியில் நிலவிய குழப்பத்துடனும் தேர்தலை சந்தித்தனர். இதனால் வெற்றி வாய்ப்பை தவற விட்டனர்.
இந்த முறை வாய்ப்பை தவற விடக்கூடாது என்பதில் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சண்முகம் மிக உறுதியாக உள்ளார். வரும் 11ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தரும் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமியை வரவேற்க அனைத்து ஒன்றியங்களிலும் தனித்தனியாக கூட்டம் நடத்தி வருகிறார்.
இந்த கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்துவதன் மூலம் கட்சி தலைமைக்கு தனது செல்வாக்கை நிரூபிப்பதுடன், எதிரணிக்கு மிரட்சியை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக ஒன்றியங்களில் நடத்தி வரும் ஆலோசனைக் கூட்டங்களில் முதலில் கட்சி நிர்வாகிகளை பேச வைத்து கட்சியின் நிறைகுறைகளை தெரிந்து கொள்கிறார். அதற்கு பதில் அளித்து பேசும் சண்முகம், அ.தி.மு.க., தொண்டர்களை நம்பும் கட்சி அதிகாரத்தையோ, பணத்தையோ நம்பி இருக்கும் கட்சி இல்லை. உண்மை தொண்டர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் பலன் கிடைக்கும் என தொண்டர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி பேசி வருகிறார். மேலும், எதிரணியை வீழ்த்த இப்போதே களம் இறங்க வேண்டும். கட்சியின் பொதுச்செயலாளரை வரவேற்கும் கூட்டம் அந்த பகுதியில் இதுவரை நடந்திருக்காத கூட்டமாக அதிரும்படி இருக்க வேண்டும். கூடுதல் வாகனங்களில் தொண்டர்களை அழைத்து வரவேண்டும் என கட்டளை பிறப்பித்து நிர்வாகிகளை தெறிக்க விட்டு வருகிறார்.
அவர், தட்டி விட்ட வேகத்தில் களம் இறங்கியுள்ள நிர்வாகிகள் மிக குறுகிய காலத்தில் சுவர் விளம்பரங்களை எழுதி வருகின்றனர். கூட்டத்திற்கு ஆட்களை சேர்ப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அ.தி.மு.க.,வினர் காட்டி வரும் வேகத்தினால், எதிர் கட்சி தலைவரின் சுற்றுப்பயணம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.