/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., பழனிசாமி பிரசாரம்; செஞ்சியில் சண்முகம் ஆய்வு
/
அ.தி.மு.க., பழனிசாமி பிரசாரம்; செஞ்சியில் சண்முகம் ஆய்வு
அ.தி.மு.க., பழனிசாமி பிரசாரம்; செஞ்சியில் சண்முகம் ஆய்வு
அ.தி.மு.க., பழனிசாமி பிரசாரம்; செஞ்சியில் சண்முகம் ஆய்வு
ADDED : ஜூலை 08, 2025 11:15 PM

செஞ்சி; செஞ்சி, மயிலம் தொகுதியில் எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி பிரசாரம் செய்ய உள்ள இடங்களை மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி., பார்வையிட்டார்.
தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி, 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணத்தை நேற்று, 7ம் தேதி கோவையில் துவக்கினார்.
இதன் தொடர்ச்சியாக வரும், 10ம் தேதி விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் தொகுதியிலும், 11ம் தேதி வானுர், மயிலம், செஞ்சி தொகுதியிலும் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
மயிலம் தொகுதியில், நாட்டார்மங்கலம் கூட்டு சாலையிலும், செஞ்சியில், திருவண்ணாமலை சாலையிலும் வேனில் இருந்தபடி பிரசாரம் செய்ய உள்ளார்.
பிரசாரம் நடக்கும் இரண்டு இடங்களையும் மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி., நேற்று பார்வையிட்டார். பின்னர் நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிகழ்ச்சியின் போது நாட்டார்மங்கலம் கூட்டு சாலையில், ஒன்றிய செயலாளர்கள் வல்லம் விநாயகமூர்த்தி, நடராஜன், மயிலம் விஜயன், சேகர், ஒலக்கூர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இணை செயலாளர் ஆனந்தி அண்ணாதுரை, பேரவை ஒன்றிய செயலாளர்கள் பன்னீர்செல்வம், பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், இளைஞரணி தமிழ், எம்.ஜி.ஆர்., மன்றம் பூபதி ஆகியோர் உடன் இருந்தனர்.
செஞ்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், அவைத்தலைவர் கண்ணன் ஒன்றிய செயலாளர்கள் புண்ணியமூர்த்தி, கோவிந்தசாமி, பாலகிருஷ்ணன், அனந்தபுரம் நகர செயலாளர் சங்கர், வழக்கறிஞர் வேலவன், சத்தியராஜ், நிர்வாகிகள் தேவராஜ், மணிமாறன், சுந்தர், வேலு, கமலக்கண்ணன், திருமலை, முனியப்பன், கவுதம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.