ADDED : ஜூலை 12, 2025 03:53 AM

செஞ்சி: நாட்டார் மங்கலம் கூட்டு சாலையில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி வேனில் பிரச்சாரம் செய்தார்.
மயிலம் தொகுதி நாட்டார்மங்கலம் கூட்டு சாலையில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.
மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி., தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் வல்லம் வடக்கு ஒன்றியம் விநாயகமூர்த்தி, தெற்கு தெற்கு ஒன்றியம் நடராஜன், மயிலம் கிழக்கு ஒன்றியம் சேகரன், மேற்கு ஒன்றியம் விஜயன், ஒலக்கூர் மேற்கு ஒன்றியம் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், ஜெ.பேரவை மாவட்ட துணை செயலாளர் பாலசுந்தரம், மாவட்ட இணை செயலாளர் ஆனந்தி, அண்ணாதுரை வல்லம் ஒன்றிய ஜெ. பேரவை ஒன்றிய செயலாளர்கள் வடக்கு பன்னீர்செல்வம், தெற்கு பாலமுருகன், குமரவிலாஸ் குமரன், மாவட்ட ஜெ., பேரவை மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், ஒலக்கூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் பூபாலன், மாவட்ட இளைஞரணி பொருளாளர் சகாதேவன், பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கரன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வீராசம்பத் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி., தலைமையில் பொதுச்செயலாளர் பழனிச்சாமிக்கு மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. கரகாட்டம், ஒயிலாட்டம், செண்டை மேளத்துடன் பட்டாசு வெடித்து, பூங்கொத்து கொடுத்து அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.