/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் பழனிச்சாமிக்கு அ.தி.மு.க.,வினர் வரவேற்பு
/
திண்டிவனத்தில் பழனிச்சாமிக்கு அ.தி.மு.க.,வினர் வரவேற்பு
திண்டிவனத்தில் பழனிச்சாமிக்கு அ.தி.மு.க.,வினர் வரவேற்பு
திண்டிவனத்தில் பழனிச்சாமிக்கு அ.தி.மு.க.,வினர் வரவேற்பு
ADDED : ஜூலை 12, 2025 03:49 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பிரசார பொதுக் கூட்டத்தில் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
அங்காளம்மன் கோவில் அருகே, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
முன்னதாக விக்கிரவாண்டியிலிருந்து, திண்டி வனம் தாலுகா அலுவலகம் அருகே பிரசார வேனில் வந்தார். அங்கிருந்து நேரு வீதியில் ரோடு ேஷா நடந்தது.
விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் சண்முகம், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு, திண்டிவனம் எம்.எல்.ஏ., அர்ஜூனன் ஆகியோருடன் சாலையில் நடந்த சென்ற பழனிச்சாமிக்கு நகர ஜெ.,பேரவை செயலாளர் ரூபன்ராஜ் தலைமையில், கரகாட்டம் மேளம் முழங்க வரவேற்பு கொடுக்கப்பட்டது.
சாலையின் இருபுறமும் பொதுமக்கள், கட்சியினர் குவிந்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அங்காளம்மன் கோவில் எதிரில் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசினார்.
இதில் நகர செயலாளர் தீனதயாளன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாநில ஜெ.,பேரவை இணை செயலாளர் பாலசுந்தரம், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் கார்த்திக், மாவட்ட பாசறை துணை செயலாளர் மோகன பிரசாத், ஒன்றிய செயலாளர்கள் ரவிவர்மன், பன்னீர், நடராஜன், மரக்காணம் பேரூர் செயலாளர் கனகராஜ், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பள்ளிப்பாக்கம் கிருஷ்ண மூர்த்தி, கீழ்சித்தாமூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகன், நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் உதயகுமார், மண்டல தொழில்நுட்ப பிரிவு தலைவர் காமேஷ், ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தனசேகரன், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் அண்ணாதுரை, நகர பாசறை துணை செயலாளர் மனோஜ்குமார், 32வது வார்டு கிளை செயலாளர் திருப்பதியார் சங்கர், தொகுதி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் குலசேகரன், மரக்காணம் மேற்கு ஒன்றிய வர்த்தகர் அணி செயலாளர் குமாரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.