/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அமைச்சர் பொன்முடியை கண்டித்து அ.தி.மு.க., 14 இடங்களில் ஆர்ப்பாட்டம்
/
அமைச்சர் பொன்முடியை கண்டித்து அ.தி.மு.க., 14 இடங்களில் ஆர்ப்பாட்டம்
அமைச்சர் பொன்முடியை கண்டித்து அ.தி.மு.க., 14 இடங்களில் ஆர்ப்பாட்டம்
அமைச்சர் பொன்முடியை கண்டித்து அ.தி.மு.க., 14 இடங்களில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 24, 2025 05:39 AM

விழுப்புரம்: ஹிந்து மதத்தையும், பெண்களையும் இழிவு படுத்தி பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் அ.தி.மு.க., மகளிர் அணி சார்பில் 14 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம்
விழுப்புரம் நகர அ.தி.மு.க., மகளிரணி சார்பில் மந்தக்கரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வடக்கு நகர செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
தெற்கு நகர செயலாளர் பசுபதி கண்டன உரையாற்றினார். தொகுதி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராதிகா செந்தில், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் ஜெகதீஸ்வரி சத்யராஜ், மகளிரணி கீதா, உட்பட பலர் பங்கேற்றனர்.
திண்டிவனம்
காந்தி சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, எம்.எல்.ஏ., அர்ஜூனன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தீனதயாளன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் பாலசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், கவுன்சிலர்கள் கார்த்திக், ஜனார்த்தனன், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வானுார், கிளியனுார்
திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்.எல்.ஏ., சக்ரபாணி தலைமை தாங்கினார். ஒன்றிய மகளிர் அணி செயலாளர்கள் மாலா, சிவரஞ்சினி முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் அமுதா சிறப்புரையாற்றினார். ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், பக்தவச்சலம், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் வெற்றிவேந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செஞ்சி
செஞ்சி ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் பிரித்திவிராஜ் தலைமை தாங்கினார். மகளிர் அணி தலைவர் மல்லிகா முன்னிலை வகித்தார். தலைமை கழக பேச்சாளர் காவேரி கண்ட உரையாற்றினார்.
மாவட்ட அவைத்தலைவர் கண்ணன், ஒன்றிய செயலாளர் செஞ்சி மேற்கு கோவிந்தசாமி, கிழக்கு சோழன், அனந்தபுரம் நகர செயலாளர் சங்கர் கலந்து கொண்டனர்.
வல்லம்
வல்லம் ஒன்றியம் நாட்டார்மங்கலம் கூட்ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர்கள் விநாயகமூர்த்தி, நடராஜன் தலைமை தாங்கினர்.
மகளிரணி ஒன்றிய செயலாளர்கள் சத்யவாணி, புனிதவள்ளி, மாவட்ட இணை செயலாளர் ஆனந்தி அண்ணாதுரை, முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் பரிமளா பன்னீர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோலியனுார்
கோலியனுார் பி.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய மகளிரணி செயலாளர் இந்துமதி ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர்கள் பேட்டை முருகன், சுரேஷ்பாபு முன்னிலை வகித்தனர்.
அவை தலைவர்கள் மனோகரன், சீத்தா கலியபெருமாள், முன்னாள் ஒன்றிய சேர்மன் விஜயா சுரேஷ்பாபு, முன்னாள் கவுன்சிலர் பிரேமா முருகன் கண்டன உரையாற்றினர்.
இதேபோல், வெள்ளிமேடுபேட்டையில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மயிலத்தில் ஒன்றிய செயலாளர் சேகர், மேல்மலையனுாரில் மகளிரணி செயலாளர் லலிதா, ஆரோவிலில் மகளிரணி செயலாளர் மாலா, மரக்காணத்தில் பேரூர் செயலாளர் கனகராஜ், வளவனுாரில் பேரூர் செயலாளர் நாராயணசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.