ADDED : செப் 18, 2025 11:15 PM

திண்டிவனம்: மயிலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க.,சார்பில், தி.மு.க.,அரசை கண்டித்து, தீவனுாரில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
திண்டிவனம் அருகே உள்ள தீவனுாரில் நேற்று முன்தினம் இரவு நடந்த கூட்டத்திற்கு, விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க.,செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார்.
மயிலம் மேற்கு ஒன்றிய செயலாளர் புலியனுார் விஜயன் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க.,மாநில மகளிர் அணி செயலாளர் வளர்மதி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், மாவட்ட இணை செயலாளர் ஆனந்தி, மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கர், மயிலம் மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் முத்துசாமி, பொருளாளர் நந்தகோபால், ஒன்றிய ஜெ.,பேரவை செயலாளர் சீனுவாசன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வீரசம்பத்,
விழுப்புரம் மாவட்ட ஐ.டி., பிரிவு செயலாளர் கோகுல்ராஜ், ஒன்றிய நிர்வாகிகள் ஆனந்தி, செந்தில்குமார், சஞ்சய்காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.