/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கல்
/
அ.தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : பிப் 24, 2026 05:08 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கோலியனுார் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், ஜெயலலிதா 78வது பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.
வி.அரியலுார் கிராமத்தில் நடந்த விழாவிற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய சேர்மன் விஜயா சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பாலசுப்ரமணியன் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் சண்முகம் பொது மக்களுக்கு, தையல் இயந்திரங்கள், குக்கர், கேஸ் அடுப்பு, அயன்பாக்ஸ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளாக வழங்கி பேசினார்.
மாநில ஜெ., பேரவை சங்கர், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரமேஷ், அரியலுார் ஊராட்சி தலைவர் தமிழரசி பழனி, நன்னாட்டாம்பாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் நடராஜன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் ராமதாஸ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுந்தர்ராஜ், மாவட்ட பிரதிநிதி ராஜி, தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் விஜயகுமார்.
ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் கமாலுதின், மகளிரணி செயலாளர் தமிழ்ச்செல்வி, கிளைச் செயலாளர்கள் பழனி, மலரழகன், செல்வம், கதிர்வேல், ரங்காராவ், தாமோதரன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

