/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீட்டில் பதுக்கிய ஐம்பொன் சிலைகள்
/
வீட்டில் பதுக்கிய ஐம்பொன் சிலைகள்
ADDED : மார் 21, 2024 01:23 AM
வானுார்:விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த புள்ளிச்சப்பள்ளம் காலனிக்கு நேற்று மதியம் சென்னையில் இருந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 10 பேர், இரண்டு வாகனங்களில் வந்தனர்.
அவர்கள், அங்குள்ள செந்தாமரைக்கண்ணன் என்பவர் மகன் செல்வக்குமார், 38, வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அதில், வீட்டின் மாடியில் அட்டை பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த நடராஜர், அம்மன், விநாயகர் உள்ளிட்ட ஐந்து ஐம்பொன் சிலைகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, வீட்டில் இருந்த அதே பகுதியை சேர்ந்த இளையராஜா, 30, உள்ளிட்ட இருவரை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றனர். போலீசார் அங்கு குவிந்திருந்ததால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
பறிமுதல் செய்த ஐம்பொன் சிலைகள் தேவநாதன் வீட்டிற்கு எப்படி வந்தன; சிலை கடத்தலில் அவருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

