விழுப்புரம்: தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியையொட்டி, விழுப்புரத்தில் விதிமுறை மீறி பஸ்களில் பொருத்தப்பட்ட ஏர் ஹாரன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரத்தில் கனரக வாகனங்கள், தனியார் பஸ்கள், இரு சக்கரம் மற்றும் இலகரக வாகனங்களில் விதிமுறை மீறி அதிக சப்தத்தை எழுப்புரம் ஏர் ஹாரன்கள் பயன் படுத்திச் செல்கின்றனர்.
இதனால், சாலையில் செல்பவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதுகுறித்து 'தினமலர்' நாளிழில் விரிவாக செய்தி வெளியாகியது.
இதன் எதிரொலியாக, விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் தலைமையிலான அலுவலர்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள் உட்பட 15 வாகனங்களில் பொருத்திய ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்துள்ளனர்.
இந்த ஆய்வுகள் தொடரும் என்றும், விதிமீறல் தொடர்ந்து கண்டறியப்பட்டால் உரிமையாளர் மற்றும் டிரைவருக்கான தண்டனை கடுமையாக இருக்கும் என வட்டார போக்குவரத்து அதிகாரி தரப்பில் ஆய்வாளர் மாணிக்கம் எச்சரித்தார்.