/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆலம்பூண்டி செயின்ட் ஜோசப் பள்ளி: 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
/
ஆலம்பூண்டி செயின்ட் ஜோசப் பள்ளி: 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
ஆலம்பூண்டி செயின்ட் ஜோசப் பள்ளி: 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
ஆலம்பூண்டி செயின்ட் ஜோசப் பள்ளி: 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
ADDED : மே 17, 2025 11:47 PM

செஞ்சி: ஆலம்பூண்டி செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில், மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுதிய 42 மாணவர்களும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு 100 சதவீதம் வெற்றி தேடி தந்துள்ளனர். இப்பள்ளி மாணவி அட்சயா 500க்கு 496 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளார்.
மாணவி ஷாஷ்மிக்கா 491 மதிப்பெண் பெற்று பள்ளியில் 2ம் இடமும், மாணவி தனலட்சுமி, மாணவன் யுகெந்திரன் 486 மதிப்பெண் பெற்று 3ம் இடம் பிடித்தனர். தமிழில் 3 மாணவர்கள் 98 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 5 மாணவர்கள் 99 மதிப்பெண்ணும், கணிதத்தில் 9 மாணவர்களும், அறிவியலில் 10 மாணவர்களும், சமூக அறிவியலில் 5 மாணவர்களும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றனர்.
500க்கு மேல் 8 மாணவர்களும், 450க்கு மேல் 18 மாணவர்களும், 400க்கு மேல் 16 மாணவர்களும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர்.
சிறப்பிடம் பிடித்த மாணவர்களை பங்கு தந்தை அசோக்குமார், தாளாளர் முனைவர் தெரேஸ்நாதன், துணை தாளாளர் ஞானாமிர்தம், பள்ளி முதல்வர் கிரீன் மேரி சோபியா, பி.ஆர்.ஓ., ராஜன், நிர்வாக அலுவலர் பினேஷ் ராஜ், மேலாளர் டினேஷ் ராஜ் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.