UPDATED : அக் 14, 2026 09:06 PM
ADDED : அக் 14, 2026 08:06 PM

விழுப்புரம்: புதுச்சேரி பாசஞ்சர் ரயிலில் 7 லிட்டர் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் ரயில்வே சப்–இன்ஸ்பெக்டர் புருேஷாத்தமன் மற்றும் போலீசார் நேற்று விழுப்புரம் ரயில் நிலைய பிளாட்பாரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பிளாட்பாரம், 4ல் புதுச்சேரி – சென்னை செல்லும் பாசஞ்சர் ரயிலில் சோதனை செய்தனர்.
இந்த ரயில் எஞ்சினில் இருந்து 2 வது பெட்டியில் கேட்பாரற்ற நிலையில் இருந்த பச்சை நிற பேக்கை போலீசார் திறந்து பார்த்தனர். அதில், புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். மொத்தம் 7 லிட்டர் மதுபானத்தை பறிமுதல் செய்த போலீசார், ரயில்வே சுகாதார துறை அலுவலகத்தில் மதுபானங்களை ஒப்படைத்து அழித்தனர். இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
