ADDED : அக் 26, 2025 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம்: புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து மதுபானம், பைக்கை பரிமுதல் செய்தனர்.
மரக்காணம் அடுத்த அனுமந்தை இ.சி.ஆர்., பஸ் நிறுத்தம் அருகே சப் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பைக்கில் 75 புதுச்சேரி மதுபான பாட்டில் கடத்தி வந்த செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரைச் சேர்ந்த நாகலிங்கம் மகன் பிரவின்குமார், 32; என்பவரை கைது செய்து மது பாட்டில்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

