ADDED : அக் 26, 2025 04:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: புதுச்சேரியில் இருந்து ஸ்கூட்டரில் மதுபாட்டில்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், கிழக்கு கடற்கரை சாலையில் கீழ்புத்துப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி ஸ்கூட்டரில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் அவர், புதுச்சேரியில் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மதுபாட்டில்கள் கடத்திச்சென்றது தெரிய வந்தது.
விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த சூனாம்பேடு கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் ஜெயப்பிரகாஷ், 26; என தெரிந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, 96 மது பாட்டில்கள் மற்றும் ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.

